search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலக டென்னிஸ் தரவரிசை"

    உலக டென்னிஸ் வீராங்கனைகளின் தரவரிசை பட்டியலில் செக் குடியரசின் கிவிடோவா 2-வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். #WTA #PetraKvitova
    பாரீஸ்:

    உலக டென்னிஸ் வீராங்கனைகளின் தரவரிசை பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது. இதன்படி பெண்கள் ஒற்றையர் தரவரிசையில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா முதலிடத்தில் தொடருகிறார். செக் குடியரசின் கிவிடோவா ஒரு இடம் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார்.

    ருமேனியாவின் சிமோனா ஹாலெப் ஒரு இடம் சறுக்கி 3-வது இடத்தை பெற்றுள்ளார். ஜெர்மனி வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் ஒரு இடம் ஏற்றம் கண்டு 4-வது இடத்தை பிடித்துள்ளார். செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா ஒரு இடம் சரிந்து 5-வது இடத்தை பெற்றுள்ளார். #WTA #PetraKvitova

    உலக டென்னிஸ் ஒற்றையர் தரவரிசையில் இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் 84-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறார். #PrajneshGunneswaran #ATPRanking
    பாரிஸ்:

    உலக டென்னிஸ் வீரர், வீராங்கனைகளின் தரவரிசைப் பட்டியலை சர்வதேச டென் னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் நோவக் ஜோகோவிச் (செர்பியா), ரபெல் நடால் (ஸ்பெயின்), அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) ஆகியோர் முறையே முதல் 3 இடங்களில் தொடருகின்றனர்.

    இன்டியன்வெல்ஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற டொமினிக் திம் (ஆஸ்திரியா) 4 இடங்கள் முன்னேறி 2-வது முறையாக 4-வது இடத்தை பிடித்துள்ளார். இறுதிப்போட்டியில் டொமினிக் திம்மிடம் தோல்வி கண்ட ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) ஒரு இடம் சரிந்து 5-வது இடத்தையும், ஜப்பான் வீரர் நிஷிகோரி ஒரு இடம் முன்னேறி 6-வது இடத்தையும், தென் ஆப்பிரிக்க வீரர் கெவின் ஆண்டர்சன் ஒரு இடம் சரிவை சந்தித்து 7-வது இடத்தையும், அர்ஜென்டினா வீரர் ஜூவான் மார்ட்டின் டெல்போட்ரோ 3 இடம் சறுக்கி 8-வது இடத்தையும் பெற்றனர். அமெரிக்க வீரர் ஜான் இஸ்னர் 9-வது இடத்திலும், கிரீஸ் வீரர் ஸ்டீபனோஸ் சிட்சிபாஸ் 10-வது இடத்திலும் நீடிக்கின்றனர்.

    இன்டியன்வெல்ஸ் போட்டியில் 3-வது சுற்றுக்குள் நுழைந்த இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் 13 இடங்கள் ஏற்றம் கண்டு 84-வது இடத்தை பிடித்துள்ளார். இது அவரது சிறந்த தரவரிசையாகும். முழங்காலில் காயம் அடைந்து தேறி வரும் இந்திய வீரர் யுகி பாம்ப்ரி 36 இடங்கள் சரிந்து 207-வது இடத்தை பெற்றுள்ளார். கடந்த 2 ஆண்டுகளில் முதல்முறையாக யுகி பாம்ப்ரி டாப்-200 இடங்களுக்கு வெளியே தள்ளப்பட்டு இருக்கிறார். இந்திய வீரர்கள் ராம்குமார் ராமநாதன் 139-வது இடத்தையும், சகெத் மைனெனி 251-வது இடத்தையும், சசிகுமார் முகுந்த் 268-வது இடத்தையும் பெற்றுள்ளனர்.

    ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய வீரர் லியாண்டர் பெயஸ் 2 இடம் முன்னேறி 94-வது இடத்தையும், ரோகன் போபண்ணா 36-வது இடத்தையும், திவிஜ் சரண் 41-வது இடத்தையும் பெற்றுள்ளனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா முதலிடத்தில் தொடருகிறார். செக்குடியரசு வீராங்கனை கிவிடோவா ஒரு இடம் முன்னேறி 2-வது இடத்தையும், சிமோனா ஹாலெப் (ருமேனியா) ஒரு இடம் சரிந்து 3-வது இடத்தையும், இன்டியன்வெல்ஸ் போட்டியில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) 4 இடம் முன்னேறி 4-வது இடத்தையும், உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா ஒரு இடம் ஏற்றம் கண்டு 5-வது இடத்தையும், அமெரிக்க வீராங்கனை ஸ்லோன் ஸ்டீபன்ஸ் 2 இடம் சரிந்து 6-வது இடத்தையும், செக்குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா 2 இடம் சறுக்கி 7-வது இடத்தையும், நெதர்லாந்து வீராங்கனை கிகி பெர்டென்ஸ் ஒரு இடம் சரிந்து 8-வது இடத்தையும் பிடித்துள்ளனர். சபலெங்கா (பெலாரஸ்) 9-வது இடத்திலும், செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 10-வது இடத்திலும் நீடிக்கின்றனர்.

    இன்டியன்வெல்ஸ் பட்டத்தை வென்ற கனடா வீராங்கனை பியான்கா ஆன்ட்ரீஸ்கு 36 இடம் உயர்வு கண்டு 24-வது இடத்தை பிடித்துள்ளார். அவரது சிறந்த தரநிலை இதுவாகும். பெலின்டா பென்சிச் (சுவிட்சர்லாந்து) 3 இடம் முன்னேறி 20-வது இடத்தை பெற்றுள்ளார். இந்திய வீராங்கனைகள் அங்கிதா ரெய்னா 2 இடம் சரிந்து 168-வது இடத்தையும், கர்மான் தாண்டி 7 இடங்கள் முன்னேறி 203-வது இடத்தையும் தனதாக்கினார்கள்.  #PrajneshGunneswaran #ATPRanking 
    உலக டென்னிஸ் ஒற்றையர் தரவரிசையில் இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் 97-வது இடத்தை பிடித்துள்ளார். #PrajneshGunneswaran
    புதுடெல்லி:

    உலக டென்னிஸ் வீரர்-வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் செர்பியா வீரர் ஜோகோவிச், ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், அர்ஜென்டினா வீரர் ஜூவான் மார்ட்டின் டெல்போட்ரோ, தென்ஆப்பிரிக்க வீரர் கெவின் ஆண்டர்சன் ஆகியோர் முறையே முதல் 5 இடங்களில் தொடருகின்றனர்.

    சென்னையில் கடந்த வாரம் நடந்த சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் அரைஇறுதிக்கு தகுதி பெற்ற இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் 6 இடங்கள் முன்னேறி 97-வது இடத்தை பிடித்துள்ளார். சென்னையை சேர்ந்த 29 வயதான பிரஜ்னேஷ் குணேஸ்வரன் ஒற்றையர் பிரிவில் ‘டாப்-100 இடத்துக்குள் முதல்முறையாக நுழைந்துள்ளார். இதன் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் 100-வது இடத்துக்குள் முன்னேறிய 3-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ஏற்கனவே சோம்தேவ்வர்மன், யுகி பாம்ப்ரி ஆகியோர் இந்த இலக்கை எட்டி இருந்தனர்.

    97-வது இடத்தை பிடித்த பிரஜ்னேஷ் குணேஸ்வரன் அளித்த பேட்டியில், ‘என்னை பொறுத்தமட்டில் இது சிறந்த மைல் கல்லாகும். கடினமான உழைப்பின் மூலம் இந்த சீசனில் எனது பல இலக்குகளில் முதல் இலக்கை எட்டி இருக்கிறேன். இந்த ஆண்டு நல்ல தொடக்கம் கண்டுள்ளேன். இன்னும் பல விஷயங்களில் நான் கவனம் செலுத்த வேண்டி இருக்கிறது. உடல் தகுதிக்காக இன்னும் அதிகம் உழைக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.

    ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்கள் ராம்குமார் 5 இடம் முன்னேறி 128-வது இடமும், காயத்தில் சிக்கி தவித்து வரும் யுகி பாம்ப்ரி 4 இடம் சரிந்து 156-வது இடமும், சகெத் மைனெனி 5 இடம் ஏற்றம் கண்டு 255-வது இடமும், சசிகுமார் முகுந்த் 22 இடம் முன்னேறி 271-வது இடமும் பெற்றுள்ளனர். இரட்டையர் பிரிவில் இந்திய வீரர்கள் ரோகன் போபண்ணா 37-வது இடத்தில் நீடிக்கிறார். அவருடன் இணைந்து ஆடும் திவிஜ் சரண் ஒரு இடம் முன்னேறி 39-வது இடமும், லியாண்டர் பெயஸ் 7 இடம் ஏற்றம் கண்டு 75-வது இடமும், ஜீவன் நெடுஞ்செழியன் 2 இடம் முன்னேறி 77-வது இடமும், புரவ் ராஜா 3 இடம் முன்னேறி 100-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா, செக் குடியரசு வீராங் கனை கிவிடோவா, ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப், அமெரிக்க வீராங் கனை ஸ்லோன் ஸ்டீபன்ஸ், செக்குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா ஆகியோர் முறையே முதல் 5 இடங்களில் நீடிக்கின்றனர். இந்திய வீராங்கனைகள் அங்கிதா ரெய்னா 3 இடம் முன்னேறி 165-வது இடத்தையும், கர்மான் கவுர் தாண்டி ஒரு இடம் சரிந்து 211-வது இடத்தையும் பெற்றுள்ளனர். #PrajneshGunneswaran
    உலக டென்னிஸ் வீரர் தரவரிசைப்பட்டியலில் ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் செர்பியா வீரர் ஜோகோவிச் (8,045 புள்ளிகள்) ஒரு இடம் முன்னேறி மீண்டும் முதலிடத்தை பிடித்தார். #Djokovic
    பாரீஸ்:

    உலக டென்னிஸ் வீரர்-வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் நேற்று வெளியிட்டது. இதன் ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் செர்பியா வீரர் ஜோகோவிச் (8,045 புள்ளிகள்) ஒரு இடம் முன்னேறி மீண்டும் முதலிடத்தை பிடித்தார்.

    முதலிடத்தில் இருந்த ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் (7,480 புள்ளிகள்) 2-வது இடத்துக்கு சறுக்கி இருக்கிறார். சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் (6,020 புள்ளிகள்), அர்ஜென்டினா வீரர் ஜூவான் மார்ட்டின் டெல்போட்ரோ (5,300 புள்ளிகள்) ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரே (5,085 புள்ளிகள்), தென்ஆப்பிரிக்க வீரர் கெவின் ஆண்டர்சன் (4,310 புள்ளிகள்), குரோஷியா மரின் சிலிச் (4,050 புள்ளிகள்), ஆஸ்திரியா வீரர் டொமினிக் திம் (3,895 புள்ளிகள்) ஆகியோர் முறையே 3 முதல் 8 இடங்களில் தொடருகின்றனர்.
    ஜப்பான் வீரர் நிஷிகோரி (3,390 புள்ளிகள்) 2 இடங்கள் முன்னேறி 9-வது இடத்தையும், அமெரிக்க வீரர் ஜான் இஸ்னர் (3,155 புள்ளிகள்) ஒரு இடம் பின்தங்கி 10-வது இடத்தையும் பிடித்துள்ளனர். பாரீஸ் மாஸ்டர்ஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற ரஷிய வீரர் காரென் கச்சனோவ் 7 இடங்கள் ஏற்றம் கண்டு 11-வது இடத்தை பெற்றுள்ளார்.
    உலக டென்னிஸ் தரவரிசையில் இந்திய வீரர் ராம்குமார் ராமநாதன் 46 இடங்கள் முன்னேறி 115-வது இடத்தை பிடித்துள்ளார். #Ramkumar #ATPRanking
    நியூயார்க்:

    உலக டென்னிஸ் வீரர்-வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் (9,310 புள்ளிகள்) முதலிடத்தில் தொடருகிறார். சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் (7,080 புள்ளிகள்) 2-வது இடத்தில் நீடிக்கிறார்.

    அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), ஜூயன் மார்ட்டின் டெல்போட்ரோ (அர்ஜென்டினா), கெவின் ஆண்டர்சன் (தென்ஆப்பிரிக்கா), டிமிட்ரோவ் (பல்கேரியா), மரின் சிலிச் (குரோஷியா) ஆகியோர் முறையே 3 முதல் 7 இடங்களில் மாற்றமின்றி தொடருகின்றனர். டோமினிச் திம் (ஆஸ்திரியா) ஒரு இடம் முன்னேறி 8-வது இடத்தையும், ஜான் இஸ்னர் (அமெரிக்கா) ஒரு இடம் சரிந்து 9-வது இடத்தையும் பெற்றுள்ளனர். ஜோகோவிச் (செர்பியா) 10-வது இடத்தில் நீடிக்கிறார்.

    இந்திய வீரர் யுகி பாம்ப்ரி ஒரு இடம் ஏற்றம் கண்டு 86-வது இடத்தை பெற்றுள்ளார். அமெரிக்காவின் உள்ள நியூபோர்ட்டில் நடந்த ‘ஹால் ஆப் பேம்’ சர்வதேச டென்னிஸ் இறுதிப்போட்டியில் அமெரிக்க வீரர் ஸ்டீவ் ஜான்சனிடம் தோல்வி கண்டு 2-வது இடம் பெற்ற இந்திய வீரர் ராம்குமார் ராமநாதன் 46 இடங்கள் முன்னேறி 115-வது இடத்தை பிடித்துள்ளார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் சிமோனா ஹாலெப் (ருமேனியா), கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்), ஸ்லோன் ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா), ஏஞ்சலில் கெர்பர் (ஜெர்மனி), ஸ்விடோலினா (உக்ரைன்), கரோலின் கார்சியா (பிரான்ஸ்), கார்பின் முகுருஜா (ஸ்பெயின்), கிவிடோவா (செக்குடியரசு), கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு), ஜூலியா கோர்ஜெஸ் (ஜெர்மனி) முறையே 1 முதல் 10 இடங்களில் மாற்றமின்றி தொடருகின்றனர்.
    உலக டென்னிஸ் தரவரிசையில் விம்பிள்டன் இறுதிப்போட்டி வரை முன்னேறிய அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் 153 இடங்கள் முன்னேறி 28-வது இடத்தை பெற்றுள்ளார். #SerenaWilliams
    லண்டன்:

    உலக டென்னிஸ் வீரர்-வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் நேற்று வெளியிட்டது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் ரபெல் நடால் (ஸ்பெயின்), ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), அலெக்சாண்டர் ஸ்வேரே (ஜெர்மனி), ஜூயன் மார்ட்டின் டெல்போட்ரோ (அர்ஜென்டினா) ஆகியோர் முறையே முதல் 4 இடங்களில் நீடிக்கின்றனர். விம்பிள்டன் இறுதிப்போட்டியில் தோல்வி கண்ட தென்ஆப்பிரிக்க வீரர் கெவின் ஆண்டர்சன் 3 இடங்கள் முன்னேறி முதல்முறையாக 5-வது இடத்தை பிடித்துள்ளார். பல்கேரியா வீரர் டிமிட்ரோவ் 6-வது இடத்தில் தொடருகிறார். குரோஷியா வீரர் மரின் சிலிச் 2 இடம் சரிந்து 7-வது இடம் பெற்றுள்ளார். அமெரிக்க வீரர் ஜான் இஸ்னர் 2 இடம் ஏற்றம் கண்டு 8-வது இடமும், ஆஸ்திரியா வீரர் டோமினிச் திம் 2 இடம் சறுக்கி 9-வது இடமும், விம்பிள்டன் பட்டத்தை கைப்பற்றிய செர்பியா வீரர் ஜோகோவிச் 11 இடங்கள் முன்னேறி 10-வது இடமும் பெற்றுள்ளனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் முதலிடத்திலும், டென்மார்க் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி 2-வது இடத்திலும் தொடருகின்றனர். அமெரிக்க வீராங்கனை ஸ்லோன் ஸ்டீபன்ஸ் ஒரு இடம் சரிந்து 3-வது இடமும், விம்பிள்டன் பட்டம் வென்ற ஜெர்மனி வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் 6 இடம் முன்னேறி 4-வது இடமும், உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா 5-வது இடமும், பிரான்ஸ் வீராங்கனை கரோலின் கார்சியா 6-வது இடமும், ஸ்பெயின் வீராங்கனை கார்பின் முகுருஜா 4 இடம் சரிந்து 7-வது இடமும், செக் குடியரசு வீராங்கனை கிவிடோவா ஒரு இடம் சறுக்கி 8-வது இடமும், செக் குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா ஒரு இடம் சரிந்து 9-வது இடமும், ஜெர்மனி வீராங்கனை ஜூலியா ஜார்ஜெஸ் 3 இடம் முன்னேறி 10-வது இடமும் பிடித்துள்ளனர். விம்பிள்டன் இறுதிப்போட்டி வரை முன்னேறிய அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் 153 இடங்கள் முன்னேறி 28-வது இடத்தை பெற்றுள்ளார்.  #SerenaWilliams  #Tamilnews
    உலக டென்னிஸ் ஒற்றையர் தரவரிசையில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் மீண்டும் முதலிடம் பிடித்தார். #RogerFederer #RafaelNadal
    மாட்ரிட்:

    உலக டென்னிஸ் ஒற்றையர் தரவரிசையில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் மீண்டும் முதலிடம் பிடித்தார்.

    உலக டென்னிஸ் வீரர்-வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் நேற்று வெளியிட்டுள்ளது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் (8,670 புள்ளிகள்) 2-வது இடத்தில் இருந்து ஒரு இடம் முன்னேறி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். முதலிடத்தில் இருந்த ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் (7,950 புள்ளிகள்) மாட்ரிட் ஓபன் போட்டியில் கால் இறுதியில் வெளியேறியதால் ஒரு இடம் சரிந்து 2-வது இடத்தை பெற்றுள்ளார். ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வேரேவ் 3-வது இடத்தில் நீடிக்கிறார். முன்னாள் நம்பர் ஒன் வீரர் நோவாக் ஜோகோவிச் (செர்பியா) 12-வது இடத்தில் இருந்து 18-வது இடத்துக்கு சறுக்கி இருக்கிறார். 2007-ம் ஆண்டு ஜனவரி மாதத்துக்கு பிறகு ஜோகோவிச் முதல் 15 இடத்துக்கு வெளியே தள்ளப்பட்டு இருப்பது இதுவே முதல்முறையாகும்.



    பெண்கள் ஒற்றையர் தரவரிசையில் ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் (7,270 புள்ளிகள்) தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். டென்மார்க் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி (6,845 புள்ளிகள்) 2-வது இடத்திலும், ஸ்பெயின் வீராங்கனை கார்பின் முகுருஜா (6,175 புள்ளிகள்) 3-வது இடத்திலும், உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா (5,505 புள்ளிகள்) 4-வது இடத்திலும் தொடருகின்றனர். செக் குடியரசு வீராங்கனை கிவிடோவா 2 இடம் முன்னேறி 8-வது இடத்தையும், மாட்ரிட் ஓபன் இறுதிப்போட்டியில் தோல்வி கண்ட நெதர்லாந்து வீராங்கனை கிகி பெர்டென்ஸ் 5 இடம் முன்னேறி 15-வது இடத்தையும், ரஷிய வீராங்கனை ஷரபோவா 12 இடங்கள் ஏற்றம் கண்டு 40-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

    ஒற்றையர் தரவரிசையில் இந்திய வீரர்களில் யுகி பாம்ப்ரி 8 இடம் சரிந்து 94-வது இடம் பிடித்துள்ளார். காலில் ஏற்பட்ட காயம் காரணமாக யுகி பாம்ப்ரி ஓய்வில் இருந்து வருகிறார். சசிகுமார் முகுந்த் 45 இடங்கள் முன்னேறி 377-வது இடத்தை பெற்றுள்ளார். ராம்குமார் ராமநாதன் 124-வது இடத்தையும், பிராஜ்னேஷ் குணேஸ்வரன் 175-வது இடத்தையும், சுமித் நாகல் 226-வது இடத்தையும், அர்ஜூன் காதே 371-வது இடத்தையும், சகெத் மைனெனி 441-வது இடத்தையும், சுந்தர் பிராஷாந்த் 467-வது இடத்தையும் பெற்றுள்ளனர்.

    இரட்டையர் பிரிவில் இந்திய வீரர் ரோகன் போபண்ணா 23-வது இடத்தில் நீடிக்கிறார். திவிஜ் சரண் 2 இடம் சரிந்து 44-வது இடத்தையும், லியாண்டர் பெயஸ் ஒரு இடம் பின்தங்கி 51-வது இடத்தையும் பிடித்துள்ளனர். பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனைகள் அங்கிதா ரெய்னா 7 இடம் முன்னேறி 187-வது இடத்தையும், கர்மான் கவுர் 16 இடம் ஏற்றம் கண்டு 254-வது இடத்தையும் பிடித்துள்ளனர். 
    ×